கெட்ட கொலஸ்ட்ராலை அடியோடு விரட்ட வேண்டுமா? இந்த ஒரு பொடியை மட்டும் சாப்பிடுங்க
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்கும் பொடியினைக் குறித்தும், அதனை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால்
இன்றைய காலத்தில் நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் நமது உடம்பில் கொழுப்பை அதிகரித்து விடுகின்றது.
நமது உடம்பில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரண்டு உள்ளது. இதில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகிவிட்டால், இவை ரத்த நாளங்களில் அடைப்பினை ஏற்படுத்துகின்றது.
இதனால் இதயத்திற்கு செல்லும் ரதத ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட காரணமாகின்றது. மாடைப்பு மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. ஆகையால் ஆரோக்கியமற்ற உணவினை தவிர்த்து கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியமாகும்.
இயற்கையான முறையில் நமது வீடுகளில் தயாரிக்கும் பொடியானது கொலஸ்ட்ராலை ரத்த நாளங்களில் படியாமல் தடுக்கின்றது.
கெட்ட கொழுப்பினை குறைப்பதற்கு சோம்பு, வெந்தயம், மல்லி விதை, சீரக பொடி பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இவை ஆயுர்வேதத்திலும் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது. இதனை எவ்வாறு தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சோம்பு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லி விதை - 2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - சிறிதளவு

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைக்கவும். அதில் வெந்தயம், சோம்பு, சீரகம், மல்லி விதை, இலவங்கப்பட்டை இவற்றினை சேர்த்து வறுக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பொடியினை வேறொரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தினமும் காலையில் இந்த பொடியினை தண்ணீருடன் கலந்து குடித்து வரவும். இவற்றினை தொடர்ந்து செய்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாவதை தவிர்க்கலாம்.

இதுமட்டுமின்றி அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது எண்ணெய்யில் பொரித்த உணவு, துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதற்கு பதிலாக பச்சை காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது சிறந்ததாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |