சாண்ட்ராவின் குழந்தைகள் பார்வதிக்கு சொன்ன வார்த்தை - கண்ணீருடன் பிரஜன்
பிக்பாஸ் வீட்டில் சாண்ட்ராவை பார்வதி தள்ளி விட்டதை பார்த்து குழந்தைகள் அதிர்ச்சியடைந்து விட்டதாக கூறியிருக்கிறார் அவரது கணவரான பிரஜின்.
பிக்பாஸ் சாண்ட்ரா
பிக்பாஸ் சீசன் தமிழ் இல் 13 வாரங்கள் முடிந்து இன்றுடன் அதாவது ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து 14 வது வாரம் தொடங்கியுள்ளது.

25 பேருடன் களைகட்டிய நிகழ்ச்சியில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டும் தான் உள்ளனர்.
இதில் அரோரா மட்டும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சாண்ட்ராவின் குழந்தைகள்
கார் டாஸ்கில் போட்டியாளர்கள் ஒரு காரின் உள்ளே எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படும்.
இதில் சாண்ட்ரா கம்ருதின் மற்றும் பாருக்கு இடையில் நடந்த தகராறு காரணமாக பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை தள்ளி விட்டனர்.

இதை தொலைக்காட்சி மூலம் வீட்டில் இருந்து பார்த்த சாண்ட்ராவின் பிள்ளைகள் பார்வதியை பற்றி பிரஜனிடம் கேட்டுள்ளனர்.
அதைப்பற்றி பேசுகையில், பார்வதியை என்னுடைய இரு பிள்ளைகளில் ஒருவருக்கு பிடிக்கும்.
அவர்கள் பார்வதி உதைத்து தள்ளி விட்டதை பார்த்து பார்வதி ஏன் அம்மாவை கிக் பண்ணுராங்க பார்வதி ஆன்டி பேட் ல என அழுதுகொண்டே தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கட்டும் பிக்பாஸ் வீட்ல பார்வதி, கம்ருதீன் கிட்ட "உண்மையாகவே லவ் பண்றீங்கன்னா நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் வாழ்த்த வர்றேன்"னு சொல்லியிருந்தேன்.
பார்வதி சாண்ட்ராவ எட்டி உதைக்கும்போது கம்ருதீன் தடுத்திருந்தா அந்த இடத்துல இவன் ஹீரோ ஆகியிருப்பான். கண்டிப்பா டாப் 5-ல இருந்திருப்பான்.
இப்பவும் எனக்கு பார்வதி மேலேயும், கம்ருதீன் மேலேயும் கோபம் இல்ல. அவங்க ரெண்டு பேரும் வெளியில போயிட்டு நல்லா இருக்கட்டும். அவங்க பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டாங்க. என பிரஜின் பேட்டியில் கூறி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |