உலகிலேயே விலையுயர்ந்த டீபாட் இதுதான் - விலை எவ்வளவுன்னு கேட்டா ஆடி போயிருவீங்க
3 மில்லியன் மதிப்புள்ள, உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்ட, தி ஈகோயிஸ்ட் என்ற தேநீர் தொட்டி, உலகின் மிக விலையுயர்ந்ததாக உள்ளது.
விலையுயர்ந்த டீபாட்
ஒரு சாதாரண டீபாட் பெரும்பாலான சொகுசு கார்களை விட மதிப்புமிக்கதாக இருக்கிறது என்றால் யாரால் நம்ப முடியும். ஆனால் அது தான் உண்மை.
இந்த டீபாட் கைவினைத்திறன், மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உலகின் மிக விலையுயர்ந்த டீபாட் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
இதுகின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. இந்த "தி ஈகோயிஸ்ட்" ஐ உலகின் மிகவும் மதிப்புமிக்க தேநீர் தொட்டியாக கின்னஸ் உலக சாதனை அறிவித்தது.
உலகின் சிறந்த தேயிலைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தேநீர் தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடித்தளம் 18 காரட் மஞ்சள் தங்கத்தாலும், தங்க முலாம் பூசப்பட்ட உண்மையான வெள்ளியின் பகுதிகளாலும் ஆனது.
இது தவிர தாய்லாந்து மற்றும் பர்மாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 1,658 வெட்டு வைரங்கள் மற்றும் 386 மாணிக்கங்களால் வெளிப்புறம் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்காரம் டீபாடிற்கு ஒரு பிரகாசமான, பளபளக்கும் காட்சியை கொடுக்கிறது. அதன் மையத்தில் 6.67 காரட் தாய் மாணிக்கம் உள்ளது. இது இந்த டீபாடின் ஆடம்பரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் கைப்பிடி வார்ப்பட புதைபடிவமாக்கப்பட்ட மாமத் தந்தத்தால் ஆனது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |