டிஆர்பி பட்டியலில் முதல் 5 சீரியல்கள் - சிங்கப்பெண்ணே எத்தனையாவது இடம்?
தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்திய TRP தரவரிசை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
சமீபத்திய TRP தரவரிசை
தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள ஒலிபரப்பாகி வருகின்றது. அதில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்கள் டிஆர்பி பட்டியலில் அதிக வாக்குகள் பெற்று முதலிடங்களை பிடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போதைய டிவி சீரியல்களில் டிஆர்பி பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களின் விபரம் வெளியாகி உள்ளது.
டிவி சீரியல்
அந்த வகையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே சீரியல். இது சென்னைக்கு ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யச் செல்லும் துணிச்சலான கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இதில் ஹீரோ இரண்டு பேர் மற்றும் ஹீரோயின் நடிப்பு மக்கள் மனம் கவர்ந்துள்ளது.
அடுத்து தமிழ் தொலைக்காட்சியின் உணர்ச்சிப்பூர்வமான நாடகங்களில் ஒன்றாக கயல் இரண்டாவது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இவரின் பெயர் கயல். இந்தத் தொடர், கயலின் போராட்டங்களையும், வாழ்க்கையின் சவால்களை அவள் கடந்து வெற்றி பெறுவதையும் எடுத்துக்காட்டும் ஒரு சீரியலாகும்.
அடுத்ததாக மக்களின் இதயங்களை கவர்ந்த மூன்றாவது சீரியல் சிறகடிக்க ஆசை. இது வாழ்க்கையின் கஷ்டங்களை எதிர்கொள்ளும் முத்துக்குமார் மற்றும் மீனா முத்துக்குமாரின் மீள்தன்மை பயணத்தை மையமாகக் கொண்ட சீரியலாகும். இது மக்கள் மனம் கவர்ந்து தற்போது பல எபிசோட்டுகளை வெற்றிகரமாக கொண்டு செல்கிறது.
ரசிகர்களை கவர்ந்து நான்காவது இடத்தை பிடித்த சீரியல் மூன்று முடிச்சு. இது குடும்பத்தில் நடக்கும் சதிகளை தாண்டி சகித்து வாழும் மருமகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியலாகும். நியாஸ் கான், ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் சந்திரன், கிருத்திகா லட்டு மற்றும் தர்ஷ்னா ஸ்ரீபால் ஆகியோர் போன்ற பலரின் நடிப்பு மக்களை ஈர்த்துள்ளது.
இதில் ஐந்து இடங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்த சீரியலாக எதிர்நீச்சல் 2 அமைந்துள்ளது. இது நான்கு மருமகள்கள் ஆணதிக்கத்தை அடக்கி அந்த குடும்பத்தில் போராட்டங்களை கடந்து வாழ்வது போல எடுக்கப்பட்டதாகும். இப்படியாக TRP தரவரிசை படி இந்த ஐந்து சீரியல்களும் ரசிகர்கள் மனம் கவர்ந்து முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |