உலகின் முதன் முதலில் கண்டுபிடிக்கபட்ட ஏ.ஐ இயர்பட்ஸ் - பேட்டரி முதல் முழு தகவல் இதோ
Mivi நிறுவனம் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) இயர்பட்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முழு விபரம் பற்றி பார்க்கலாம்.
(AI) இயர்பட்ஸ்
இந்தியாவில் Mivi நிறுவனம் உலகின் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு (AI) இயர்பட்ஸ்-ஐ தயாரித்து அதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்றைய இயர்பட்ஸ் போல அவ்வளவு விலையும் இல்லை. ஆனால் பயன் நிறைந்தது.
இந்த இயர்பட்ஸ், அதிவேக ஒலி தொழில் நுட்பத்தையும், ஏ.ஐ. திறன்களையும் உணர்வுபூர்வமான மற்றும் புத்திசாலித்தனமான இன்-இயர் துணையை உருவாக்கும் என Mivi நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழு தகவல்
இது இந்தியாவில் தான் தயாரிக்கபட்டு வடிவமைக்கபட்டுள்ளது. இதன் தோற்றம் பிரீமியமாக வடிவமைக்கபட்டு இருக்கும். இதன் முழு உடலும் ஒரே உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்க்க பளபளப்பாக ஈர்க்கக்கூடிய தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மற்றைய இயர்பட்ஸ்-ஐ விட தனித்து காட்ட உதவுகிறது. கேஸ் உட்பட இதன் எடை 50 கிராமுக்கு சற்று அதிகமாகும்.
இதில் புளூடூத் 5.4 மற்றும் LDAC கோடெக் உள்ளது. 40 மணிநேரம் வரை பேட்டரிக்கு உறுதி. இதில் 13mm டிரைவர், 4 மைக்ரோஃபோன் அமைப்பு (quad microphone set up) உள்ளது.
சத்தமான சூழல்களிலும் கூட அழைப்புகளை எளிதாகக் கையாளும் திறன் இதற்கு உள்ளது. நாம் கோல் அழைப்பில் மறு முனையில் இருக்கும் நபரின் குரலை தெளிவாக கேட்கலாம்.
இது IPX4 மதிப்பீட்டைக் கொண்டுள்ளதால், நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது. 3D ஒலி அமைப்பு இதனுடன் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதியும் உள்ளது.
இது எல்லாம் விட இது ஏஐ ஆதரவு உள்ளது. இதன் குறைந்தபட்ச விலை ரூ.6,999 விலையுள்ள இந்த Mivi AI Buds, ரூ.7,000 விலையில் தற்போது கிடைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |