ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் தான் காரணமா? உண்மையை உடைத்த சேது பட நடிகை
நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகியோரின் பிரிவுக்கு தான் தான் காரணம் என்று கூறப்பட்ட வதந்திக்கு 25 ஆண்டுகள் கழித்து சேது பட நடிகை அபிதா கொடுத்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராமராஜன் - நளினி
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் தான் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதே காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் ராமராஜன். அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களிக் பட்டியலில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.

இவர் திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது 1987-ல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கை 2000 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது.

அதற்கு காரணம் ராமராஜன் ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது தான் என அப்போது தனவல்கள் வெளியானது.கூடவே இவர்களின் விவாகரத்துக்கு ஒரு நடிகை தான் காரணம் என்ற வதந்தியும் அப்போது எழுந்தது.
ராமராஜன் - அபிதா சர்ச்சை
ராமராஜன், நளினி விவகரத்து நிகழ்ந்த போது, ராமராஜனும், அபிதாவும் இணைந்து ‘சீறிவரும் காளை’ என்கிற படத்தில் நடித்தால், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததால்தான் நளினி ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் என்ற ஒரு சர்ச்சை கிளம்பியது.

அபிதா ஓபன் டாக்
இது குறித்து 25 ஆண்டுகளின் பின்னர் நடிகை அபிதா பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், “தனக்கு ராமராஜனுடன் ‘சீறிவரும் காளை’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு ஹோம்லி கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.
ராமராஜனுடன் ஷூட்டிங்கில் நடிப்பேன். ஷூட்டிங் முடிந்ததும் நான் மேக்கப் அறைக்கு சென்று விடுவேன். நான் நளினி மேடத்தை நேரில் பார்த்தது கூட கிடையாது.
நளினி மேடம் ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததில்லை.ஆனால் என்னால் தான் நளினியும், ராமராஜனும் பிரிந்து விட்டார்கள் என்று தேவையில்லாத வதந்தியை கிளப்பினார்கள்.

ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார், அதனால்தான் அவருக்கும் நளினிக்கும் விவாகரத்தானது என்றெல்லாம் சொன்னார்கள். அது உண்மையாக இருந்தால் அப்போதே எனக்கும் அவருக்கும் திருமணம் நடத்தி இருக்க வேண்டுமே?
அதைக்கேட்டு ரொம்ப ஃபீல் செய்து அழுது கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.
ஆரம்பத்தில் ரொம்ப அழுவேன், காலம் போகப்போக சரி இப்படி பேசுவதும் அவர்களுக்கு ஒரு வேலை என்று சொல்லிவிட்டுவிடுவேன் என குறித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |