தேவாங்கிடம் இப்படியெல்லாம் திறமை இருக்கா? உங்களுக்கு தெரியாத உண்மை
தேவாங்கு (Slender loris) என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். இது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும்.
இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18-26 செ.மீ் ( 7-10 அங்குலம்) நீளமும் 85-350 கி எடையுமே உள்ள சிறு விலங்கு.
பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். சுமார் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து 1-2 குட்டிகளை ஈன்றுகின்றன. பிறந்த குட்டிகளுக்கு 6-7 மாதம் பாலூட்டி வளர்க்கின்றன.
ராட்சத கண்கள் | ஒரு தேவாங்கின் ஒரு கண் அதன் மூளையை விட பெருசாக இருக்குமாம். அதோட உடம்புலேயே பெரிய உறுப்பு இதுதான். ஆனால், அதன் கண்களை மற்ற உயிரினங்களை போல கண்களை சுழற்ற முடியாது. |
2-360° ஹெட் ஸ்பின் | இது ஆந்தைக்கே டஃப் கொடுக்கும். இது தன்னுடைய தலையை கிட்டத்தட்ட 360 டிகிரி வரைக்கும் சுற்ற முடியுமாம். தன்னுடைய உடலை திருப்பாமலேயே பின்னால் இருப்பவர்களை கண்டுபிடித்து விடும். |
3- 100% அசைவம் | இந்த உயிரினம் முழுக்க முழுக்க ஊண் உண்ணி. பூச்சிகள், சிலந்திகள், பல்லிகள், ஏன் குட்டிப் பறவைகள், வௌவால்களைக் கூட வேட்டையாடி சாப்பிடும். |
4- 'நைட் பார்ட்டி' ஜீவன்! | பகல் முழுக்க நல்லா தூங்கிவிட்டு, இரவில் தன்னுடைய வேட்டைக்குக் கிளம்பிடும். |
5-தாவுறதுல கிங் | இதோட உடம்பு ரொம்ப குட்டி. ஆனா இதோட பின்னங்கால்கள் ரொம்ப நீளமா இருக்கும். தேவாங்கு தன்னுடைய உடம்பு நீளத்தை விட 40 மடங்கு தூரம் வரைக்கும்கூட தாவும். அதாவது சுமார் 5 மீட்டர் வரைக்கும் தாவி மரத்துக்கு மரம் போகும். |
6- பேருலேயே ஒரு மேட்டர்! | இதோட பேரு 'டார்சியர்' (Tarsier) னு வரக் காரணமே அதோட கணுக்கால் எலும்புகள் (Tarsal bones) தான். அந்த எலும்புகள் ரொம்ப நீளமா இருக்கறதால தான், இதால இவ்வளவு தூரம் தாவ முடியுது. |
7 - சீக்ரெட் பாஷை! | இதுங்க ஒன்னோட ஒன்னு பேசிக்கிறது நம்ம காதுக்கே கேட்காதாம்! ஆமா, மனுஷங்க காதுக்கு கேட்காத 'அல்ட்ராசவுண்ட்' சத்தத்துல தான் இதுங்க கத்திப் பேசிக்குமாம். |
8-ஒல்லிக்குச்சி விரல்கள்! | இதோட விரல்கள் ரொம்ப நீளமா, ஒல்லியா இருக்கும். மரக்கிளைகளை இறுக்கமா பிடிக்கவும், பூச்சிகளை டக்குனு பிடிச்சு எடுக்கவும் இந்த நீளமான விரல்கள் தான் உதவுது. |
9 - சோகமான உண்மை! | இது கொஞ்சம் சோகமான விஷயம். தேவாங்குகளை கூண்டுல அடைச்சு வச்சா அதுகளுக்கு சுத்தமா பிடிக்காதாம். ரொம்ப மன அழுத்தமாகி, கூண்டுல தலையை இடிச்சுக்கிட்டு தற்கொலையே செஞ்சுக்க முயற்சி பண்ணுமாம். அதனால் இதுங்க காட்டுல சுதந்திரமா இருக்குறது தான் நல்லது. |
10- -குறிப்பிட்ட இடம் | இந்த விசித்திரமான பிராணிகளை நம்ம ஊர்ல பார்க்க முடியாது. இதுங்க தென்கிழக்கு ஆசியாவுல இருக்குற தீவுகள்ல (பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா) மட்டும்தான் வாழுது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
