உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருமே ஆரோக்கியம் பற்றிய கவலை துளியளலும் இன்றி துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
அந்த வகையில் பீட்சாவை விரும்பி உண்ணாத நபர்களே இல்லை என்றால் மிகையாகாது. மேற்கத்திய உணவுகளில் மிகவும் பலருக்கும் பிடித்தமான உணவாக அறியப்படும் இந்த பீட்சா உலகளவில் இன்றும் பிரபலமான உணவாக கருதப்படுகிறது.
இதன் ருசியும், இதில் சேர்க்கப்படும் வண்ணமயமான டாப்பிங்ஸ் என்று சொல்லப்படும் காய்கறிகள் மற்றும் இறைச்சிச்துண்டுகளும் அதன் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் காட்சிபப்படுத்தப்பட்டிருக்கும்.
சிக்கன் பீட்சா, மட்டன் பீட்சா என பல வகையான பீட்சாக்கள் உலகளவில் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவது சீஸ் பீட்சா தான். அப்படி நாம் எந்த வகையான பீட்சா வாங்கினாலும் அதன் நடுவில் ஒரு சின்ன டேபிள் அல்லது நாற்காலியை வைத்து தருவது வழக்கம்.
அது எதற்காக தருகின்றார்கள் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அவ்வாறு பீட்சாவில் பயன்படுத்தும் சிறிய பிளாஸ்டிக் டேபிளை பீட்சா ஸ்டூல் அல்லது பீட்சா டேபிள் என்று குறிப்பிடுவார்கள்.
இது எதற்காக பீட்சாக்களில் வைக்கபபடுகின்றது என்பது பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
உண்மையில் பெரும்பாலானவர்கள் பீட்சாவை ஆன்லைனில் தான் அடர் செய்து வாங்குகின்றார்கள். அவ்வாறான சமயங்களில் பீட்சா நடுவில் இந்த ஸ்டூல் அல்லது டேபில் வைப்பதால் அது பீட்சா அட்டையின் மேல் பகுதியில் படாமல் இருக்கும். இதனால் பீட்சா நாம் எதிர்பார்த்த படியே எந்தவித பாதிப்பும் இல்லாமல் அழகாக நமது கைகளுக்கு வந்துசேரும்.
எந்தவித சேதமும் இல்லாமல் பீட்சாவை நாம் சாப்பிடுவதற்காகவே இந்த பீட்சா டேபிளை அதில் வைத்துள்ளனர்.
மேலும், டெலிவரி செய்யத் தயாராக உள்ள பீஸ்ஸாக்கள் சூடாக இருப்பதால், அவற்றின் நீராவி அவற்றின் அட்டைப் பெட்டியை உடைக்கக்கூடும். அதனை தடுக்கவும் குறித்த பீட்சா ஸ்டூல் பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
