ஒரே கிராமத்தில் அதிகரிக்கும் இரட்டையர்கள்... தமிழ்நாட்டில் இப்படி ஒரு அதிசய கிராமமா?
உலகத்தில் ஒருவரைப்போலவே ஏழு பேர் இருப்பதாக கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மையான பொய்யா என்பதை விட அவர்களை காண்பது மிகவும் அரிது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் சுமார் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் ஒரே பகுதியில் இருப்பது தான் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது அங்காடிமங்கலம் என்னும் கிராமம் இரண்டு மாவட்ட எல்லையில் இருக்கும் இந்த கிராமத்தை பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தான். இந்த பகுதியில், சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

அவற்றுள் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இரட்டையர்கள் ஒத்த உருவத்துடன் இருப்பதால், அவர்கள் மாறி மாறி, ஒரே பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்றால், அங்குள்ள யாராலும் இவர்களை அடையாளம் காண முடியாது.
சினிமா போன்ற மிகவும் வேடிக்கையான குழப்பங்கள், இப்பகுதியில் உள்ள இரட்டையர்கள் மத்தியிலும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையெல்லாம் விட அந்த கிராமத்தில் இரட்டையர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல, அங்காடிமங்கலம் கிராமத்திற்கும் இரட்டையர்கள் அதிகமாக இருப்பது ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த கிராமத்தை பலரும் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.