வியப்பில் மருத்துவர்கள்... ஒரே நேரத்தில் கருவுற்ற பெண்ணுக்கு இருவேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்!
அமெரிக்காவில் பிறந்த இரட்டையர்கள் விநோதத்துக்கும் சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர்.
15 நிமிட இடைவெளியில் பிறந்த இருவருக்கும் பிறந்த மாதம், தேதி நேரம் ஆண்டு அனைத்தும் மாறியுள்ளது.
இந்த விநோத சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிஃபோர்னியாவின் நாட்டிவிடாட் மருத்துவமனையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பாத்திமா என்ற பெண், பிரசவத்துக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவு 1.45 மணிக்கும் மேல் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால், இருவரும் 15 நிமிட இடைவெளியில் பிறந்தால், ஒரு வருக்கு கடந்த ஆண்டு பிறந்த தேதியும், மற்றொருவருவருக்கு இந்த ஆண்டு பிறந்த தேதி, நேரம் மற்றும் ஆண்டாக அமைந்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் பேஸ்புக்கில் புகைப்படத்தினை வெளியிட்டு பதிவிட்டுள்ளது.
எங்களால் இதனை நம்ப முடியவில்லை. இருவரும் இரட்டையர்கள். ஆனால், இருவருக்கும் பிறந்த தேதி, நாள் நேரம், ஆண்டு என அனைத்தும் இருவேறு ஆண்டுகளில் அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் இப்படியொரு விநோதமான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வு உளப்பூர்வமாக எதிர்கொண்டதில்லை.
எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையின் இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் விய்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், இரட்டையர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.