30 வயதானால் இந்த அறிகுறிகள் முகத்தில் தோன்றுகின்றதா? உங்க வயதை அதிகமாக காட்டுமாம்
அழகான முகத்தில் வயதாவதற்கு உண்டான அறிகுறிகளை எவ்வாறு முன்கூட்டியே கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வயதான தோற்றம்
பொதுவாகவே மனிதர்கள் எப்போதும் அழகான முகத்தை கொண்டிருக்கவே விரும்புவார்கள். அப்படியான அழகை நீண்ட காலம் பாதுகாக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும். கொஞ்சம் கவனமும் கூடுதல் பராமரிப்பும் இருந்துவிட்டால் முகம் அழகாக இளமையாக இருக்கும்.
30 வயதை தாண்டியதும் உரிய பராமரிப்பு இல்லாவிட்டால் முகத்தில் வயதாவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே முகத்தில் பார்க்க முடியும்.
இது எளிதாக கண்டறிய முடியும் என்பதால் கவனித்ததும் உடனடியாக உரிய பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவிலேயே முகத்தில் வயதான தோற்றத்தை காணமுடியும். அப்படியான அறிகுறிகள் என்னென்ன என்பதையும் அதை எப்படி தவிர்ப்பது என்று தெரிந்துகொள்வோம்.
Zika virus symptoms: கர்ப்பிணிகளின் கருவை சிதைக்கும் ஜிகா வைரஸ்- அறிகுறிகளுடன், ஆபத்துக்களை தெரிஞ்சிக்கோங்க
அறிகுறிகள் என்ன?
ஈரப்பதம்
சருமத்தில் ஈரப்பதம் குறைந்து பொலிவற்று காணப்படுகின்றது. முகத்தில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மென்மையாக அழகினைப் பெற முடியும்.
படிப்படியாக குறைந்தால் உங்கள் சருமத்தில் அழுக்குகள் தேங்கி சருமம் இறுக்கமடைவதுடன், இறந்த செல்களும் அங்கேயே இருக்கின்றது. புதிய செல்கள் உருவாகாமல் முகம் பொலிவிழந்து நாளடைவில் வறண்டு கழையிழந்துவிடும்.
சுருக்கம்
இளவயதில் முதுமை தோற்றத்தை உண்டாக்கும் அறிகுறிகளில் முதன்மையானது சுருக்கங்கள் தான். இவை தோலில் உள்ள கொலாஜன் குறைபாடால் உண்டாக கூடியது. இவை முகத்தில் சுருக்கங்களையும், கோடுகளையும் உண்டாக்க கூடியது.
சருமம் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையில், வயதாகும் போது இந்த புரதங்கள் வலுவிழக்கவோ குறையவோ செய்வதால், முதுமை தோற்றத்தை பிரதிபலிக்கின்றது.
கரும்புள்ளி
இளவயதில் நேரடியாக வெயிலில் சருமம் படும் போது எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது ஆனால் வயது அதிகரிக்கும் போது சூரிய கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. செல்கள் சருமத்தின் மேல் அடுக்கில் வரும் போது அவை கரும்புள்ளிகளாக உருவாகிறது.
ஆரம்ப கட்டத்தில் முகத்தில் எங்காவது ஒரு இடத்தில் காணப்படும் நிலையில், நாட்கள் ஆக ஆக முகம் முழுவதும் படரக்கூடும். ஆகவே இந்த கரும்புள்ளிகளை அலட்சியப்படுத்தக்கூடாது.
Thyroid symptoms: நாள்பட்ட நோய்களை உண்டுபண்ணும் தைராய்டு சுரப்பி- இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை
முகத்தில் இறுக்கம் என்பது சருமத்தை தளர்வடைய செய்யாமல் பாதுகாப்பதை குறிக்கும். நெகிழ்வுத்தன்மை என்பது முகத்தில் கன்னங்கள், தாடைகள் போன்ற பகுதியில் உறுதி தன்மை குறைந்து சருமம் நெகிழ்வதை பார்க்கலாம்.
மேலும் சில அறிகுறிகள்
பொதுவாக முதலில் தோன்றுவது உடல்வலிதான். உடலின் எந்தப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் வலி ஏற்படுவதுடன், சற்று ஓய்வு எடுத்த பின்பு இது தானாகவே மறைந்துவிடவும் செய்கின்றது.
உடலில் சாதாரணமாக அடிபட்டால் கூட தாங்கமுடியாத வலி ஏற்படுவதுடன், இது குணமடைவதற்கு பல நாட்கள் மற்றும் வாரங்கள் கூட ஆகலாம்.
ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும்போது ஏதாவது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றால், யாராவது ஒருவர் எடுத்துக் கொடுக்குமாறு கூறுவது.
வெளியில் செல்லும் போதோ, வேலைகள் செய்யும் போதோ விரைவில் களைப்பு ஏற்படுவதாகத் தெரிவதுடன், சற்று ஓய்வு எடுக்கவும் தோன்றும்.
இரவு நேரங்களில் படுத்த உடனே தூக்கம் வராமலும், அடிக்கடி விழிப்பு உண்டாகும். மேலும் விடியற்காலையிலேயே தூக்கம் கலைந்துவிடுவது ஒரு அறிகுறியாகும்.
சிறிய அளவில் மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் காற்று நிறைய நிரம்புவதால் அடிக்கடி பெரும் சத்தத்துடன் காற்று வெளியேறும். ஆனால், இதில் துர்நாற்றம் இருக்காது.
கார், பஸ் அல்லது ரயிலில் நெடுந்தூரம் பயணம் செய்தவுடன் அடுத்த நாள் முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும்.
சின்னச் சின்னச் செய்திகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளச் சற்று சிரமமாக இருக்கும். குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்ளும் புது பழக்கம் ஆரம்பமாகும்.
வயது ஆக ஆகச் சற்று குழந்தைத்தனமும் வெளிப்படும். அடிக்கடி முன் கோபம் வரும். இது முக்கியமாக நெருங்கிய உறவினர்கள்மீது வரும்.
பேச்சிலும், காரியத்திலும் சற்று அதிகமாகவே சுயநலம் இருப்பது தெரிய வரும். கைகளில் சிறிது நடுக்கம் ஏற்படலாம், முக்கியமாகப் பலரது முன்னிலையில் இது அதிகமாகத் தெரியும்.
வெளியே தனியாக நடக்கும் போது துணைக்கு யாராவது ஒருவர் கூட இருந்தால் நன்றாக என்று மனம் நினைக்கத் தோன்றுமாம்.
பாலுணர்வு சற்று குறைய ஆரம்பிக்கும். அதைச் செயல்படுத்துவதிலும் சற்று குறையிருப்பது தெரிய வரும்.
உண்மையான காரணம் என்ன?
உயிரியல் ரீதியாக முதுமை ஏற்படுவதற்கான காரணங்கள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
செல்களுக்கு இடையில் கடத்தப்படும் மரபணு குறியீடுதான் நமது டிஎன்ஏ ஆகும். இந்த செயல்முறையில் நிகழுகின்ற தவறுகளால் முதுமை அடைதல் அதிகரிக்கிறது. டிஎன்ஏ தவறுகளால் ஸ்டெம் செல்கள் பாதிக்கப்படுகின்றது. எல்லா செல்களிலும் மற்ற செயல்பாடுகள் அனைத்தையும் தூண்டுகின்ற செல்தான் ஸ்டெம் செல் எனப்படுகிறது.
டிஎன்ஏ ஓரத்தில் இருக்கும் பிளாஸ்டிக் போன்ற இடைவெளிகள் குரோமோசோம்களை பாதுகாக்கின்றது. வயதாகும் போது இவை மோசமடைவதால் குரோமோசோம்கள் பாதிக்கப்படுகின்றது.
செல்களில் இருக்கும் மரபணுக்களின் செயல்திறன்கள் குறைந்துவிடுவதால், வயது முதிர்வு பிரச்சனை ஏற்படுகின்றது.
வயதாகும் போது செல்கள் புதுப்பிக்கும் திறனை இழந்துவிடுகின்றது. மேலும் செல் இழைமணியும் தனது வேலை செய்யும் திறனை இழந்துவிடுகின்றது. செல்களுக்கு சக்தியை வழங்குவது இந்த செல் இழைமணி ஆகும்.
செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்வது வயதாகும் போது குறைந்துவிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |