Super Singer: சரணின் பாடலால் உணர்ச்சிவசப்பட்ட கோபிநாத்! கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சரண் பாடிய பாடலுக்கு கோபிநாத் கொடுத்துள்ள பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 தற்போது இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.
பல வாரங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த பேட்டியில் ஏழு போட்டியாளர்கள் இறுதி பைனலிஸ்டாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தங்களது குரல் திறமையினை வெளிக்காட்டி நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றனது.
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலி, சரண்ராஜா இவர்களைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மீண்டும் போட்டியிட்ட தர்ஷனா ஆறாவது பைனலிஸ்டாகவும், ஆபிரகாம் ஏழாவது பைனலிஸ்டாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது செமி பைனல் சுற்று நடைபெறும் நிலையில், சிறப்பு விருந்தினராக வந்த கோபிநாத் சரண் பாடிய பாடலுக்கு பரிசு ஒன்றினை கொடுத்துள்ளார்.
ஆம் பணம் சேருவதற்காக பர்ஸ் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் சரண் பாடிய பாடலும் ஒட்டுமொத்த அரங்கத்தையும் வாயடைக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |