ட்ரெண்டிங் பாடலுக்கு அசத்தல் ரியாக்ஷன் கொடுத்த பூஜா வெங்கட்... படு வைரலாகும் வீடியோ!
சூப்பர் சிங்கர் புகழ் பூஜா வெங்கட் அசத்தல் சேலையில் ட்ரெண்டிங் பாடலுக்கு செம கியூட்டாக ரியாக்ட் செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பூஜா வெங்கட்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ,சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூஜா வெங்கட்.

சூப்பர் சிங்கர் சீசன் 9 இல் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து பின்னர் வெளியேற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கரின் பின்னர், சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார். அதுவும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அடையாளத்தையும் கொடுத்தது.
அதனை தொடர்ந்து ஒருசில ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். சமீக காலமாக பூஜா வெங்கட் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் ட்ரெண்டிங் பாடலுக்கு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் செம கியூட்டாக ட்ரியாக்ஷன் கொடுத்து பூஜா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |