நாவிற்கு சுவையான உருளைகிழங்கு பாப்கார்ன்! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக வீடுகளில் செய்யும் ஸ்நாக்ஸ்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் சுவை கொஞ்சம் குறைவாக இருப்பதால் பிள்ளைகள் இதனை விரும்பி எடுத்து கொள்வது இல்லை.
மேலும் நேரமின்மையால் கடைகளில் இருக்கும் ஸ்நாக்ஸ் தான் அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள். இது அவ்வளவு ஆரோக்கியமானவைகள் அல்ல.
உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை உடலினுள் கொண்டு செல்கிறது. இதனால் அதிக எடை மற்றும் கொலஸ்ரால் தொடர்பான நோய்கள் வேகமாக பரவுகிறது.
அந்தவகையில் கிழங்கு வகைகளில் மிகவும் சுவை நிறைந்த கிழங்கான உருளைகிழங்கில் பாப்கார்ன்செய்து சாப்பிட்டுள்ளீர்களா? சுவை அப்படியே அட்டாகாசமாக இருக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அந்த வகையில் உருளைகிழங்கை பயன்படுத்தி பாப்கார்ன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சோள மாவு - தேவையானளவு
முட்டை - 1
எண்ணெய் - தேவையானளவு
பிரெட் தூள் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தயாரிப்பு முறை
முதலில் பாப்கார்ன் செய்ய தேவையான உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரமான துண்டுளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் உருளைகிழங்கை போட்டு அந்த கிழங்கை மூடும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
அதில் உருளைகிழங்கை வேக வைக்கவும். வெந்தவுடன், பிளாஸ்டிக் கவரில் சோள மாவை போட்டு அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் நன்றாக போட்டு குலுக்கவும்.
இவ்வாறு செய்வதால் சோளமாவு முழுவதும் உருளைக்கிழங்கு முழுவதும் கலந்திருக்கும். இதனை தொடர்ந்து ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்து கொண்டு இருக்கும் போது இன்னொரு தட்டில் பிஸ்கட் தூள் அல்லது பான் தூளை கொட்டி பரப்பி வைக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து பிஸ்கட் தூளில் பிரட்டி எணணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த மொறு மொறு சுவையில் உருளைகிழங்கு பாப்கார்ன் தயார்!