Hair growth: வாரத்திற்கு 2 முறை போடுங்க.. தலைமுடி காடு மாதிரி வளரும்!
தற்போது தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் அதிகமானவர்களுக்கு உள்ளது. தலைமுடி பிரச்சினையால் இளம் வயது தோற்றம் மாறி, வயதானவர்கள் போன்று காட்சியளிக்க வைக்கிறது.
ஒருவருக்கு தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால் அதனை எப்படி சரிச் செய்யலாம் என்பதனை யோசிக்க வேண்டும். ஏனெனின் நாட்கள் செல்ல தலைமுடி உதிர்வு அதிகமாகி, தலைமுடி மெலிந்து போகத் தொடங்கி, வழுக்கை கூட ஏற்படலாம்.
தலைமுடி உதிர்வதை தடுக்க நினைப்பவர்கள் மனம் மற்றும் ஆரோக்கியத்தை சரியாக கவனித்து கொள்வது அவசியம். அதிகமான மன அழுத்தங்கள் கூட தலைமுடி பிரச்சினை ஏற்படுத்தும்.
தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களைக் கொண்டு ஹேர் பேக்குகளை போட்டு வந்தால், முடி உதிர்வது நிற்பதோடு, முடியின் வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும்.
தலைமுடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் உதவியாக உள்ளது. விளக்கெண்ணெய் கொண்டு ஹேர் மாஸ்க்குகளை போட்டு வந்தால், முடி நன்கு வளர்ச்சியடையும்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை தூண்டும் 3 விளக்கெண்ணெய் ஹேர் பேக்குகளை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
- டீ-ட்ரீ ஆயில் - 2-3 துளிகள்
- கற்றாழை - 1/2 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பௌலில் விளக்கெண்ணெய் எடுத்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர், சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப்பை தலையில் அணிந்து, சுமாராக 30-40 நிமிடம் ஊற வைக்கவும். பேக் போட்ட பின்னர், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வெந்தய பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பௌலில் வெந்தய பவுடரை எடுத்து, விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் உடன் கலந்து பேக் போன்று தயார் செய்து கொள்ளவும். அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை தடவ வேண்டும்.
அதன் பின்னர், ஒரு டவலை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, அந்த டவலை தலையில் சுற்றி, 10-15 நிமிடம் கட்ட வேண்டும்.
அப்படியே ஒரு 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த ஹேர் மாஸ்க்கின் முழு பலனைப் பெற விரும்பினால், வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |