சுவையான சாக்லேட் பாப்கார்ன்! எப்படி செய்யலாம்?
சோளம் மிகவும் சத்தான ஒரு உணவுப்பொருள். பொதுவாக திரைப்படங்கள் பார்க்கும்போது பிடித்த உணவுப்பண்டமாக இருப்பது பாப்கார்ன் தான்.
அதிலும் சொக்லேட் பொப்கோர்ன் என்றால் சொல்லவா வேண்டும்? இனி சொக்லேட் பொப்கோர்ன் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
குக்கீஸ் சொக்லேட் - 50 கிராம்
பொப்கோர்ன் சோளம் - 1 கப்
பட்டர்/நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலாவதாக சாக்லேட்டை ஒரு பாத்திரத்தில் பொடித்துப் போடவும். பின்னர் வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
அந்த தண்ணீர் கொதிக்கும்போது, சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து உருக வைக்க வேண்டும்.
சாக்லேட் உருக ஆரம்பித்தவுடன் அதை இறக்கி பட்டர் அல்லது நெய் சேர்த்து கிளறவும்.
அதன் பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு, பாப்கார்னைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி விடவேண்டும். பாப்கார்ன் பொரிந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டவும்.
அதன்பின்னர் தயாரித்து வைத்துள்ள சாக்லேட் சிரப்பை பாப்கார்ன் மேல் விடவும். அருமையான சபக்லேட் பாப்கார்ன் ரெடி.