10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்: கடலை மா போண்டா!
மழைக்காலம் அல்லது மாலை வேலைகளில் ஏதாவது உணவுகளை சூடாக செய்து சாப்பிடத் தோன்றும். அந்த மாதிரி நேரத்தில் உங்கள் நாவுக்கு ஏற்ற சுவையைத் தர கடலை மா போண்டா ட்ரைப் பண்ணி பார்க்கலாம்.
வெறும் 10 நிமிசம் மட்டுமே போதும், ரொம்பவும் ஈஸியான ஸ்நாக்ஸ் கடலை மா போண்டா. அந்த வகையில் இப்போது கடலை மாவு போண்டா எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 300 கிராம்
சோடா உப்பு – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் – 3
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் அதிலும் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோடா உப்பு, அரிசி மாவு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது உங்களுக்கு ருசியான சூடான மொறு மொறு போண்டா ரெடி. இது ஒரு மாலைநேரங்களில் தேநீருடன் சேர்த்து சாப்பிட சூப்பரான ஸ்நாக்ஸ் ஆகும்.