நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பச்சை நெல்லிக்காய் சம்மந்தி
விட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல தொற்றுநோய்களில் இருந்து விடுபடலாம்.
இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன் சருமத்திற்கு நல்லது, முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நெல்லிக்காயை வைத்து சம்மந்தி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
புளி - சிறிது (2 கொட்டையளவு),
நெல்லிக்காய் - 5,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 10 பல்,
காய்ந்த மிளகாய் - 4 ,
தேங்காய் துருவல் - அரை மூடி,
இஞ்சி - 1 இன்ச் அளவு,
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு,
செய்முறை
மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும், இதன் பின் தோல் நீக்கிய இஞ்சி சேர்க்கவும்.
அடுத்ததாக பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும், கடைசியாக தேங்காய் துருவலுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நெல்லிக்காய் சேர்த்து அரைத்து எடுத்தால் பச்சை நெல்லிக்காய் சம்மந்தி தயார்!!
