மிஞ்சி போன சாதத்தில் மொறு மொறுப்பான கட்லெட் செய்ய தெரியுமா? சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி!
பொதுவாக வீடுகளில் இரவு நேரத்தில் மிஞ்சு போன சாதத்தை என்ன செய்வது என்று தெரியாமல் குப்பையில் வீசுவோம்.
ஆனால் இப்படி நாம் சாதத்தை வீண் விரயம் செய்வதால் சில நேரங்களில் மனத்திற்கு கஷ்டமாக இருக்கும்.
மேலும் சில வீடுகளில் இந்த சாதத்தை வைத்து இட்லி, தோசை, கஞ்சி இது போன்ற உணவு செய்வார்கள்.
இது போன்ற உணவுகள் செய்ய தெரியாதவர்கள் குப்பையில் கொட்டுவார்கள்.
அந்த வகையில் மிஞ்சி போன சாதத்தை வைத்து செய்யும் சுவையான கட்லெட் ரெசிபி தெரியுமா? அது தொடர்பில் மேலதிகமாக தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - ஒரு பவுல்
வேக வைத்து மசித்த சோளம் - அரை பவுல்
மஞ்சள் - 1/4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பூண்டு விழுது - 1மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 மேசைக்கரண்டி
ரவை - 2 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்னர் அந்த கலவையுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மசித்து வைத்த சோளம் மற்றும் உப்பு என்வற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இதனை தொடர்ந்து ரவையை எடுத்து அதனை தனியான ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்து கொள்ளவும். மிஞ்சி போன சாதத்தை எடுத்து, அதனை மத்து கரண்டியை வைத்து மசித்து கொள்ளவும்.
மசித்து வைத்திருக்கும் சாதத்துடன், காய்கறிகள் கலவை மற்றும் வறுத்த ரவை என்பவற்றை சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து உருண்டையாக பிடித்து பிஸ்கட் தூளுடன் கலந்து எண்ணெய் போட்டு பொரித்து கொள்ளவும்.
இந்த ரெசிபியை பின்பற்றினால் சுவையான கட்லெட் தயார்!