ஜாக்கெட் இல்லாமல் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட சுந்தரி
சுந்தரி சீரியலில் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியெல்லா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
சுந்தரி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தியும், ஒரு பெண்ணின் கருப்பு நிறத்தையும் வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
ஏனெனில் இதில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரியல்லாவின் யதார்த்தமான நடிப்பு அனைவரையும் இவர் பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது.
குறித்த சீரியலில் தனது கருமையான நிறத்தால் கணவரால் வெறுக்கப்படும் ஒரு பெண்ணாகவும் தன்னை விட்டு தனது கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதை நினைத்தும் கவலைக் கொள்ளாமல் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
வைரல் புகைப்படம்
இந்த சீரியலில் சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியல்லா இந்த சீரியலில் மட்டுமல்ல பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ரஜினி நடித்த கபாலி, நயன்தாராவின் ஐரா, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரியல்லா தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
அந்த புகைப்படத்தில் வெள்ளை நிறத்தில் ஜாக்கெட் அணியாமல் சேலை அணிந்து கிராமத்து பெண் போல தோற்றமளித்திருக்கிறார்.