இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் ரகசியம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் புடவை ஸ்டைலிங் இவ்வளவு அழகாக இருக்க சில காரணங்கள் இருக்கின்றது.
அதனை படித்து நீங்களும் இனி அசத்துங்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் புடவை ஸ்டைலிங் டிப்ஸ் இதோ
காஸ்ட்டியூம்
புடவை எடுப்பாக தெரிவதற்கு புடவையின் கலர் காம்பினேஷன் அவசியம்.அந்த வகையில் கத்திரிப்பூ மற்று கரும் பச்சை நிறத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த காம்பினேஷன் டக்கராக உள்ளது. விசேஷங்களுக்கு புடவை எடுக்க நினைப்பவர்கள் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஜாக்கெட்
ஜாக்கெட்டை பொறுத்தவரை அரை கை பிளவுஸ் அணிந்துள்ளார்.கரும் பச்சை நிற புடவைக்கு கத்திரிப்பூ கலர் பிளவுஸ் பொருத்தமாக உள்ளது.
அணிகலன்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் கழுத்தில் அதிகமாக அணியாமல் ஒரே ஒரு நெக் பீஸ் மட்டும் அணிந்துள்ளார். நெக்லஸுக்கு மேட்ச்சாக ஜிமிக்கி,வளையல் மற்றும் ஒட்டியானம் அணிந்துள்ளார்.குறைவான அணிகலன்களை அணிந்து கூடுதலாக ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேக்கப்
எந்த ஒரு உடை அணிந்தாலும் முகம் பளிச்சென இருந்தால் தான் பார்ப்பவர்கள் கண்களை கவர முடியும். அந்த வகையில் காஜல், லிப்ஸ்டிக், மஸ்காரா ஆகியவை போட்டு செம்ம அழகாக இருக்கிறார்.
ஹேர் ஸ்டலை பொறுத்தவரை புடவைக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுத்துள்ளார்.