சுந்தரி சீரியல் நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கருப்பு நிற கிராமத்து பெண்ணை மையமாக கொண்டு உருவாகும் இத்தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார், இதில் கேப்ரியல்லா செல்லஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நயன்தாராவின் ஐரா படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கேப்ரியல்லா, தற்போது சீரியலில் கலக்கி வரும் கேப்ரியல்லா சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
முப்பில்லா தமிழே தாயே என்ற பாடலுக்காக தன்னுடன் இணைந்து பணியாற்றியதாக கேப்ரியல்லாவுடன், எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதை ஷேர் செய்த கேப்ரியல்லா, நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம் நடந்தது. ரொம்ப நன்றி ஏ.ஆர்.ரஹ்மான் சார். இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இறைவனுக்கு நன்றி” என்றுள்ளார்.