கண்ணம்மாவாக அறிமுகமாகிய வினுஷா: சுந்தரி கேப்ரில்லாவிற்கு சகோதரியா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி கண்ணம்மாவாக நடித்து வந்த நிலையில் தற்போது வினுஷா என்ற புதிய நடிகையை களமிறக்கியுள்ளனர்.
டஸ்கி டோன் வைத்துதான் இந்த சீரியலின் கதைக்களம் வெற்றி என்பதால், அதே நிறத்தழகியை தேடிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா குழு, வினுஷாவை தேர்வு செய்துள்ளனர். டஸ்கி மாடலான வினுஷா, ரோஷினி போன்றே தோற்றம் தருகிறார்.
இவர் 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி அரக்கோணத்தில் பிறந்துள்ளார். கல்லூரி படிப்பினை முடித்த இவர் சுந்தரி சீரியலில் சுந்தரியாக நடித்துவரும் கேப்ரில்லாவுடன் இணைந்து நடித்துள்ளாராம்.
நடிகை வினுஷா தனக்கு கேப்ரியல்லா சகோதரி போன்றவர் எனக் குறிப்பிட்டு, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காணொளியோடு பதிவு செய்துள்ளார்.
பாரதி கண்ணம்மாவில் அறிமுகமாகியிருக்கும் வினுஷாவிற்கு விவசாயம் என்றால் மிகவும் பிடிக்குமாம். டிக் டாக்கிலும் கலக்கியுள்ளார்.
குறித்த சீரியலில் தான் சினிமாவில் அறிமுகமாகவில்லை. ஆம் ஏற்கனவே கேபிரியல்லா, டிக் டாக் ஃபேம் அக்ஷய் ஆகியோருடன் இணைந்து விரைவில் வெளியாகவிருக்கும் N4 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஆகவே முதலில் வெள்ளித்திரையில் கால் பதித்த பின்பு ரசிகர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பதற்கு சின்னத்திரையே உதவும் என்று தற்போது சின்னத்திரையில் எண்ட்ரி ஆகியுள்ளார்.