சக்கரை நோயாளிகளுக்கு காலையில் இப்படி தோசை சுட்டு கொடுங்க சுகர் எப்பவும் ஏறாமல் இருக்கும்!
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், இந்த நோய் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த ஓட்ஸ் வெங்காய தோசை.
இந்த ஓட்ஸ் தோசையை எப்படி செய்வது என்று தெரியுமா? ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 3 கப்
தயிர் - 2 கரண்டி
சீரகம் - 1 கரண்டி
பச்சை மிளகாய் - 3
அரிசி மா - 2 கரண்டி
சோள மா - 2 கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சை மிளகாயை பொடி பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
எடுத்து வைத்துள்ள ஓட்ஸை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக அரைத்த ஓட்ஸ், தயிர், அரிசி மா, சோள மா, அரைத்து எடுத்துக் கொண்ட பச்சை மிளகாய் சீரக கலவை என்பவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
30 நிமிடத்திற்கு ஊற வைத்த ஓட்ஸ் மாவுடன் பொடியாக நறுக்கி வைத்துக் கொண்ட வெங்காயமும், கறிவேப்பிலையும் சேர்த்து தோசையை சுட்டு எடுத்தால் சக்கரை நோயாளிகளுக்கு சத்தான ஓட்ஸ் வெங்காய தோசை தயார்.