சுருட்டை முடியை வைத்துக் கொண்டு அசௌகரியமாக இருக்கிறதா? நேராக மாற்ற சூப்பர் டிப்ஸ் இதோ
சுருட்டை முடியால் சிலர் பெரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் சிலர் அதனை அழகாக பராமரித்துக் கொள்வார்கள். ஒரு சிலருக்கு சுருட்டை முடி அழகுதான். அதனால் அவர்கள் எல்லோருக்கு மத்தியில் தனித்து காணப்படுவார்கள். சிலரை குருவிக்கூடு என்று கேலியும் செய்வார்கள்.
சுருட்டை முடி சுருள் சுருளாக இருப்பதால் தலையை சீவுவதற்கும் சௌகரியமாக இருக்கும். இந்த சுருள் முடியை நேராக மாற்ற வேண்டும் என்றால் பியூட்டி பார்லர்களுக்கு காசை வாரியிறைக்க நேரிடும்.
இதனால் இயற்கையான பொருட்களுடன் உங்கள் வீடுகளிலேயே சில டிப்ஸ்களை செய்யலாம்.
சுருட்டை முடியை நேராக மாற்ற
1. 2 கனிந்த வாழைப்பழங்களை எடுத்து நன்றாக மசித்து 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பிறகு கலந்துக் கொண்ட கலவையை தலையில் தடவி 30 நிமிடத்திற்கு ஊற வைத்து ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரால் கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் சுருட்டை முடி நேராக மாறும்.
2. ஒரு பாத்திரத்தில் 1/4 கப் பாலில் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து 1 இலிருந்து 2 மணி நேரம் வரை ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இவ்வாறு வாரம் 2முறை செய்து வந்தால் சுருட்டை முடி போய் நேராக மென்மையாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |