சீரியல் நடிகை ரவீனா இது? மலேசியாவில் ஹாட் உடையில் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ரவீனா மலேசியாவுக்கு சுற்றுலா சென்று ட்ரெண்டிங்காக குட்டை உடையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவீனா
ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா.
இவர் டீன் ஏஜை எட்டியவுடன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.
இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார்.
சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ரவீனா, அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக கலக்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார். தற்போது ஜு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார்.
நடிப்பில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் ரவீனா தற்போது மலேசியாவில் மிகவும் கிளாமரான குட்டை உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |