சுருட்டை முடியால் கஷ்டப்படுகிறீர்களா! நேராக மாற்ற சூப்பர் டிப்ஸ்
சுருட்டை முடியால் சிலர் பெரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் சிலர் அதனை அழகாக பராமரித்துக் கொள்வார்கள்.
ஒரு சிலருக்கு சுருட்டை முடி அழகுதான். அதனால் அவர்கள் எல்லோருக்கு மத்தியில் தனித்து காணப்படுவார்கள். சிலரை குருவிக்கூடு என்று கேலியும் செய்வார்கள்.
சுருட்டை முடி சுருள் சுருளாக இருப்பதால் தலையை சீவுவதற்கும் சௌகரியமாக இருக்கும். இந்த சுருள் முடியை நேராக மாற்ற வேண்டும் என்றால் பியூட்டி பார்லர்களுக்கு காசை வாரியிறைக்க நேரிடும். இதனால் இயற்கையான பொருட்களுடன் உங்கள் வீடுகளிலேயே சில டிப்ஸ்களை செய்யலாம்.
சுருட்டை முடியை மாற்ற
வீட்டில் சோறு வடித்த கஞ்சியை ஒருநாள் முழுவதும் நன்றாக புளிக்க வைத்து விட்டு அடுத்தநாள் கற்றாழை ஜெல்லை கலந்து கலவையாக மாற்றி முடியின் நுனிவரை ஹேர் பேக் போல் பூசி ஒரு மணி நேரம் காயவைத்து விட்டு குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தாமல் குளிக்க வேண்டும்.
இரண்டு முட்டைகளில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக் கருவுடன் கடலை மா சேர்த்து பேஸ்ட் போல செய்து தலைக்கு நன்கு போட்டுக்கொள்ளவும். அரை மணிநேரத்திற்குப் பிறகு தலையை நன்கு அலசி குளிக்கலாம்.