ஈரத்தலையுடன் இதை செய்யாதீங்க... முடி உடனே கொட்டிவிடுமாம்...!
பெண்களின் அழகிற்கு மிக முக்கியமாக திகழ்வது அவர்களின் தலைமுடி தான். இன்றைய இளம்பெண்களை முடி கொட்டும் பிரச்சினை, இளநரை, பொடுகு தொல்லை என வாட்டி வதைக்கிக் கொண்டிருக்கின்றது.
நாம் தலைக்கு குளித்துவிட்டு செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நமது முடி அதிகமாக கொட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அந்த தவறுகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளவோம்.
ஈரமான தலையில் முடியை சீவுவது
நிறைய பேர் தலைமுடி ஈரமாக இருக்கும் போதே சீவுவார்கள். இப்படி ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்தும் போது, முடி அதிகமாக சேதமடையும். எனவே உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் முடி உதிர்வதை தடுக்க வேண்டுமென நினைத்தால், முடி முற்றிலும் உலரும் வரை காத்திருந்து பின் சீப்பை பயன்படுத்துங்கள்.
இறுக்கமாக கட்டுவது
தலைக்கு குளித்த பின் பெரும்பாலான பெண்கள் தலைமுடியை இறுக்கமாக கட்டுவார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், இம்மாதிரியான தவறுகளை அதிகம் செய்வார்கள்.
ஈரமான முடியை கட்டும் போது, தலைமுடி அதிகம் சேதமடையும். எனவே இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள். இல்லாவிட்டால் கொத்து கொத்தாக முடி கொட்டும்.
தலைமுடியை தேய்ப்பது
தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்துவதற்கு நாம் பெரும்பாலும் துண்டால் துடைப்போம். ஆனால் இனிமேல் அப்படி முடியை உலர்த்தாதீர்கள். ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கலுமாகும்.
உங்கள் முடியை உலர்த்த நினைத்தால், மென்மையான துணியால் தலைமுடியை ஒத்தி எடுங்கள்.
ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது
தற்போது பலரது வீடுகளில் முடியை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் இருக்கிறது. ஹேர் ட்ரையர் ஈரமான முடியை உலர்த்துவதற்கு தான். ஆனால் இந்த ஹேர் ட்ரையரில் இருந்து வெளிவரும் வெப்பக் காற்று பலவீனமான நிலையில் இருக்கும் ஈர முடியை சேதப்படுத்தும்.
எனவே முடியை முடிந்தவரை இயற்கையாக உலர்த்துங்கள். ஈரமான முடியுடன் தூங்குவது பலர் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பார்கள். அப்படி தலைக்கு குளிப்பவர்கள் முடியை முற்றிலும் உலர்த்தாமல் ஈரமான முடியுடனேயே தூங்குவார்கள்.
இப்படி ஈரமான முடியில் தூங்கினால், தலையணையில் அதிகம் உரசி, அதனால் அளவுக்கு அதிகமாக தலைமுடி சேதமடையும்.