வாழைப்பழங்கள் எப்போதும் பிரெஷ்ஷா இருக்கணுமா? அப்போ இனி இப்படி செய்து பாருங்க!
பொதுவாகவே நம்மில் சிலர் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். அப்படி சாப்பிடுபவர்கள் தினமும் வாழைப்பழம் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
அவ்வாறு வாங்கி வைக்கும் போது அந்தப் பழங்கள் நீண்ட நாட்களுக்கு புதிது போல இருக்காது. அப்படி வாழைப்பழங்கள் பிரெஷ்ஷா இருக்க இந்த டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழத்தின் நன்மைகள்
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.
வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி உள்ளவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதனில் இருக்கும் பாதிப்பு குறையும்.
வாழைப்பழங்கள் பிரெஷ்ஷாக இருக்க
வாழைப்பழங்களை வீட்டிற்கு வாங்கி வந்ததும் பிளாஷ்ட்டிக் பை ஒன்றில் போட்டு காற்று போகாதபடி இறுக்கமாக முடி வைக்கவேண்டும்.
வாழைப்பழத்தை ஒரு பேப்பர் பையில் போட்டு முடி வைத்தாலும் வாழைப்பழத்தின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
வாழைப்பழம் வாங்கி வந்ததும் ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியான காம்பு உடையாமல் பிரித்து வாழைப்பழத்தின் காம்பில் செல்லோடேப் கொண்டு சுற்றி வைத்தால் வாழைப்பழம் பழுதாகாமல் இருக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |