உங்கள் வயிற்றில் புழு நெண்டுக் கொண்டே இருக்கிறதா? இதுதான் உங்களுக்கான அறிகுறியும், வைத்தியமும்!
பொதுவாகவே பெரும்பாலானோருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் இருக்கும் பெரும் பிரச்சினை தான் இந்த வயிற்றில் இருக்கும் புழுக்கள் இது அடிக்கடி தொந்தரவு செய்துக் கொண்டு தான் இருக்கும்.
இந்த வயிற்றுப் புழுக்கள் பல உடல் செயல்பாடுகளை சீர்குலைத்து குடலில் வீக்கத்தை உருவாக்குவதால் மிகவும் சிக்கலாக இருக்கும். வயிற்றுப் புழுக்கள் குடல் புழுக்கள் என்றும் நூல் புழுக்கள், சாட்டைப் புழுக்கள், கொக்கிப் புழுக்கள், உருளைப் புழுக்கள் என பல வகைகளில் இருக்கிறது.
நமது வயிற்றுக்குள் இந்தப் புழுக்கள் குடிக்கும் தண்ணீர் மூலமும் உணவில் மூலமும் வயிற்றுக்குள் செல்கிறது.
அறிகுறிகள்
சிக்கலான உடல்நலப் பிரச்சினைகள்
கெட்ட சுவாசம்
தூக்கமின்மை
அடிக்கடி பசி எடுத்தல்
என்ன சாப்பிடலாம்
இந்தப் புழுங்கள் உங்கள் உடலில் இருந்து போகவேண்டும் என்றால் 6 நாட்களுக்கு தொடர்ந்து பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளையும் காய்கறிகளையும் பழங்களையும் தானிய வகைகளையும் சாப்பிட வேண்டும்.
2 பூண்டுகளை பற்களில் நசுக்கி உண்பதன் மூலம் அவை உடலுக்கு சென்று குடல் புழுக்களை அழிக்கும்.
நீங்கள் தினமும் உண்ணும் உணவில் அகத்திக்கீரை, பப்பாளி பழம், பெருங்காயம், ஓமம், பட்டை, மஞ்சள் என்பவற்றை எடுத்துக் கொள்ளும் போது குடல் புழுக்கள் அழிந்து விடும்.