மூன்றே நாட்களில் உடலில் உள்ள புழுக்களை அழித்து விரட்டும் அதிசக்தி வாய்ந்த பொருட்கள்
உங்களுக்கு குடல் புழுக்கள் பிரச்சினை இருந்தால், படாதபாடு பட வேண்டியிருக்கும். எம்மில் சிலர் வயிற்றில் புழு பிரச்சனையை அதிகம் சந்திருப்பார்கள்.
குறிப்பாக குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து மன அழுத்தத்தை போக்கும் சின் முத்திரை
வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இந்த புழுக்களின் பிரச்சனையை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும். அதோடு சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றலாம்.
செலரி
உங்கள் வயிற்றில் அல்லது உங்கள் குழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், செலரி நல்ல தீர்வைத் தரும்.
செலரியில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது பூச்சிகளை அழிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும்.
இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.
வேப்பிலை
வேப்பிலையும் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் திறன் கொண்டுள்ளது. ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. ஆகவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.
பப்பாளி விதை
பப்பாளியில் பாப்பைன் என்னும் நொதி பொருள் உள்ளது. அதுவும் பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.
ஓமம்
ஓம விதைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம், குடல் புழுக்கள் அழிந்து வெளியேற்றப்படுமாம். குழந்தைகளுக்கு கொடுப்பது என்றால் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
மாதுளை
மாதுளையின் தோல்களுக்கு வயிற்றுப் புழுக்களை அழிக்கும் திறன் உள்ளது. அதற்கு மாதுளையின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு நாளைக்கு 2 வேளை நீரில் கலந்து குடித்து வர, சில நாட்களில் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.
பாகற்காய் ஜூஸ்
பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வருவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம் இல்லாவிட்டால் பாகற்காயின் விதைகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிடலாம்.