பாம்பை பார்த்து தலைதெறிக்க ஓடிய பூனை! வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி
பூணை படுத்திருக்கும் போது அதனுடன் விளையாட முனையும் பாம்பின் ஆர்வத்தை கண்டு பூனை இருந்த இடம் தெரியாமல் ஓடும் காட்சி பார்ப்பவர்களை வியப்படை வைத்துள்ளது.
விலங்குகளின் சேட்டைகள்
தற்போது சமூக வலைத்தளம் பக்கம் சென்றாலே விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் தான் முன்னின்று நம்மை வரவேற்கிறது. அந்தளவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ப்படுகிறது.
இவ்வாறு பகிரப்படும் வீடியோக்கள் நம்மை வியப்பூட்டும் வகையிலும், எம்மை சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். இதனை பார்ப்பதற்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், விலங்குகளின் வேடிக்கை காட்சியை பார்ப்பதற்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்தவகையில் வீட்டில் செல்லமாக வளர்க்கும் பிராணிகளில் பூனையும் ஒன்று.
இதனை பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாகும் கியூட்டாகவும் இருக்கும். இதனாலே பூனைகள் அதிகமாக வீடுகளில் வளர்க்கப்படுகிறது.
பாம்பை பார்த்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பூனை
இதன்படி, அழகிய பொன்னிறம் கொண்ட பூனையொன்று வீட்டிலுள்ள கதிரை மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.
அப்போது அந்த பூனை பக்கத்திற்கு வந்த பாம்பு பூனையை சுற்றிக் கொள்ள முனைகிறது. இந்த விடயம் தெரியாமல் தன்னுடைய கால்களில் சோம்பல் முறித்தப்படி பாம்பை கீழ் பக்கமாக தள்ளுகிறது.
தள்ளியும் போகாமல் பாம்பு மேற்பக்கமே வருவதால், பூனை கண் விழித்து பார்த்த போது அங்கு இருப்பது என தெரிந்துக் கொண்டு துள்ளி குதித்து ஓடுகிறது.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி one_earth__one_life என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்நேரம் பார்த்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் பூணைகளுக்கு சரியான பாடம் என் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.