அழகிகள் பயன்படுத்தும் Moisturizer என்ன தெரியுமா? இனி நீங்களும் செய்யலாம்!
பொதுவாக பெண்களுக்கு வெயில், குளிர் என எந்த காலமாக இருந்தாலும் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
மேலும் சருமத்தை முறையாகபாதுகாக்காவிட்டால் சருமம் வறண்டு அதன் உண்மை நிலையிலிருந்து மாற்றமடைந்து விடும்.
இதனை தொடர்ந்து சிலருக்கு சரும வறட்சி, பருக்கள் இது போன்று இருந்தால் உடனடியாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களின் பிரச்சினை காலப்போக்கில் சரியாகி விடுகிறது.
ஆனால் இதனை நாம் ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டால் அது வெடிப்பு, அரிப்பு, சருமம் சிவத்தை போன்ற புதிய வகையான பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.
இது போன்ற பிரச்சினைகளிலிருந்த எம்மை பாதுகாக்கும் மாய்ஸ்சரையை வாங்குவதற்கு நாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்வோம்.
ஆனால் நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு மாய்ஸ்சரைசர் வீட்டிலே செய்யலாம், இது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- தேன்
- கற்றாழை ஜெல்
- வாழைப்பழம்
- பாதாம் எண்ணெய்
- பட்டர்
- சாக்லேட்
- பப்பாளி பழம்
- ஓட்ஸ்
மேற்குறிப்பிட்ட பொருட்களில் ஏதாவது இரண்டு பொருட்கள் இருந்தால் போதும் நமக்கு தேவையான Flavor களில் நாம் மாய்ஸ்சரைசர் செய்து கொள்ளலாம்.
1. தேன் + தேங்காய் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி தேன் + தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலவையான கலந்து முகத்தில் தடவி 20 - 30 நிமிடங்களுக்கு உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் இயற்கையான ஒரு பிரகாசம் கிடைக்கும்.
2. கற்றாழை ஜெல் + பாதாம் எண்ணெய் + தேன்
இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் ஒரு தேக்கரண்டிபாதாம் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு துளி தேன் சேர்த்து கலந்து சருமத்திற்கு காலையில் அப்ளை செய்து விட்டு கழுவினால் அழகான ஒரு சருமம் கிடைக்கும். இது போல் செய்வதால் சரும ஆரோக்கியத்தை காலங்காலத்திற்கும் பராமரிக்கலாம்.
3. தேன் + வாழைப்பழம்
ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனை துண்டாங்களாக வெட்டி எடுத்து கொண்டு பின்னர் அதில் தேன் சேர்த்து பழத்தை நன்றாக பவுலில் போட்டு மசித்து காலையில் முகம் கழுவும் முன்னர் இதனை ஒரு பேக்காக போட்டு விட்டு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.