குளிர்காலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே அதிகமான உறக்கம், கதகதப்பான உடல், படுக்கையை விட்டு நீங்க இயலாத மனம் என அது ஒரு தனி சுகம் வந்துவிடும்.
அதிலும், குறிப்பாக வாட்டி எடுத்த வெயில் காலத்திற்குப் பின் கிடைக்கும் அலாதியான குளிர் இன்பம். நெருப்பை மூட்டி குளிர் காய்வதில் கிடைக்கும் சுகமே தனிதான்.
குளிர் காலத்தில் இவை மட்டும் இன்பம் அல்ல... இவற்றுக்கு நடுவே கணவன் மனைவியின் இடைவெளியில்லா நெருக்கம் கூட இன்பம் தான்.
குளிர்காலம் என்றாலே உடல் கதகதப்பைத் தேட உங்கள் துணை உங்களைத்தான் கட்டி அணைப்பார்கள். அதன் பின் தானாக எல்லாம் நடந்துவிடும். குளிர்காலத்தில் சளி , இருமல் வருவது இயல்பு. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம்.
ஆனால் நீங்கள் குளிர்காலத்தில் முழுமையான உறவில் ஈடுபடுகிறீர்கள் எனில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாக அதிகரிக்கும்.
சளி , இருமல், மூக்கு ஒழுகுதல் தொல்லையே இருக்காது. உறவு கொள்வதால் உடலில் மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் சுரக்கும். அவை மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக இயக்கும்.
மன அழுத்த இருந்தாலும் விலகும். மகிழ்ச்சி நீடித்திருக்கும். கதகதப்பான குளிர் ரொம்னாஸ் செய்ய சிறந்த தருணம். அதனால்தான் ஹனிமூம் செல்லும் ஜோடிகள் ஊட்டி, கொடைக்கானல் என மலைப்பிரதேசங்களை தேர்வு செய்வார்கள்.
அதோடு குளிர்காலத்தில் இரவு சீக்கிரம் நெருங்கிவிடும் என்பதால் வெளியே செல்லும் கணவன் மனைவி வீட்டிற்கு சீக்கிரம் வரக்கூடும். நீண்ட நேரம் பேசிக்கொள்ளவும், ரொமான்ஸ் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், குளிர்காலத்தில் பெண்கள் உறவு கொள்வதற்கு சௌகரியமாக உணர்வதாக 2000 ஆண்டு வெளியிட்ட ஆய்வில் கூறியுள்ளனர். சில பெண்கள் மாதவிடாய் சிரமத்தை குறைக்க உறவு கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
வெயில் காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதேசமயம் விரைவாகவும் வந்துவிடுமாம். எனவே கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு குளிர்காலம் உகந்தது என்று கூறப்படுகிறது.