தொப்பையைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்: எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
இன்றைய காலக்கட்டத்தில் உலக மக்களில் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேரும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. நமது உடல் எடையானது அளவிற்கு அதிகமாக அதிகரிக்கும்போது அது நமது உடலுக்கு கேடு விளைவிக்கிறது.
இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயகாரமான நோய்களை ஏற்படுத்துகின்றது. எனவே சரியான அளவில் நமது உடல் எடையை பராமரிப்பது அவசியமானது ஆகும்.
இதற்கு டயட்டுகள், உடற்பயிற்சிகள் மட்டும் போதாது. ஒரு சில இயற்கை உணவு பொருட்களை எடுத்து கொள்வது நல்லது. அதில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய். இது காலங்காலமாக உடல் எடையை குறைக்க பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இது எப்படி உடல் எடையை குறைக்க பயன்படுகின்றது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
லாரிக் அமிலமானது உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் அல்லது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. இதனால் இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
தேங்காய் எண்ணெய் பசியை அடக்கவும் கொழுப்பு இழப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் இது கொழுப்பை குறைக்க உதவுகிறது என சில ஆதாரங்கள் கூறுகின்றன.
தேங்காய் எண்ணெயில் ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக உள்ளன. அவை விரைவாக உறிஞ்சப்படுவதால் அவை கலோரி எரிவதை அதிகரிக்கின்றன. எனவே சோயாபீன் எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்கு பதில் தேங்காய் எண்ணெயை மாற்றுவதன் மூலம் உங்கள் இடுப்பின் சுற்றளவை குறைக்க முடியும்.
ஆனாலும் தேங்காய் எண்ணெயில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் அதை அதிக அளவு சாப்பிட்டால் எளிதில் எடை அதிகரிக்கும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. எனவே தேங்காய் எண்ணெயை குறைவாக பயன்படுத்தவும்.
எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
வயிற்றை சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் இருவரும் ஒரு நாளைக்கு தங்களது உணவில் 30 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வு கூறுகின்றது.
பயன்படுத்துவதற்கான சில ஆரோக்கியமான வழிகள்
சூடான நீரில் அல்லது மூலிகை தேநீரில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்து அதை காலையில் குடிக்கவும். தேங்காய் எண்ணெயின் வாசனை சிலருக்கு பிடிப்பதில்லை. இதனால் அவர்கள் தேங்காய் எண்ணெயில் சமைப்பதை விரும்புவதில்லை. அவர்களுக்கு உணவில் தேங்காய் எண்ணெயை சேர்க்க இது சுலபமான வழி ஆகும்.
மிருதுவான அல்லது இனிப்பு போன்ற உங்களுக்கு பிடித்த உணவுகளை செய்யும்போது வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். நீங்கள் தேங்காய் எண்ணெயை சாலட் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
உணவு நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு தேங்காய் எண்ணெயை உட்கொள்வது பசியை குறைக்கும். இதனால் பசியை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எடை குறைக்கவும் இது உதவும்.