முதன்முதலாக தன் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி சின்மயி
தன் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருக்கிறார். இவர்களின் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
பாடகி சின்மய்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றி டைட்டிலை வெற்றிப் பெற்றவர் தான் சின்மய்.
இவரின் பாடும் திறமையைப் பார்த்து ஏ.ஆர்.ரகுமான் இவருக்கு முதன்முறையாக வாய்ப்புக் கொடுத்து பின்னணி பாடகியாக அறிமுகமாக்கினார்.
இந்தப் பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல இசையமைப்பாளர்களுடன் பணியான்றி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருந்திருக்கிறார்.
பாடகி சின்மய் நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார் இது தற்போது வரைக்கும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
குழந்தைகளின் புகைப்படம்
இந்நிலையில் பிறந்ததிலிருந்து இன்று வரைக்கும் குழந்தைகளின் முகத்தைக் காட்டாமல் இருந்த சின்மய். தன் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
குழந்தைகளின் புகைப்படங்களை சப்ரைஸ்ஸாக பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |