சின்மயி குழந்தைகள் ஏன் வைரமுத்து போல இல்லை: சீண்டியவர்களுக்கு தரமான பதிலடி
சின்மய்யின் குழந்தைகளை வைத்து பேசியவர்களுக்கு சிறப்பான பதிலைக் கொடுத்திருக்கிறார்.
வைரமுத்து - சின்மய் புகார்
தமிழில் 100இற்கும் அதிகமான படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்தவர் தான் வைரமுத்து. கவிதைகள், நாவல்கள் போன்றவையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழில் எண்ணற்ற பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார் ஆனால் அவருக்கே கடினம் கொடுத்த சில பாடல்களும் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார். இது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் சின்மயிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், வைரமுத்து தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட எந்தப் படத்திற்கும் அவரை விமர்சித்து ஏன் அவருக்கு வாய்ப்பு தருகிறீர்கள் என்று டுவிட் செய்து வருவதை அவர் எது செய்தாலும் அவருக்கு எதிராக பல கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருந்துக் கொண்டு இருந்தார்.
வைரமுத்துவின் குழந்தைகளா?
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் என்னிடம் எதாவது கேளுங்கள் என சின்மய் கேட்க, அதற்கு ரசிகர் ஒருவர் உங்கள் குழந்தைகளின் முகங்களைக் காட்டுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.
அதற்கு சின்மய் குழந்தைகளின் முகத்தை காட்ட எனக்கு விருப்பமில்லை வெறுப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் வைரமுத்துவின் ரசிகர்கள் வைரமும் முத்தும் பிறந்து இருக்கிறார்கள் என்று சொல்வது என்று பழக்கமாகிவிட்டது.
அதனால் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டால் ஏன் எனது குழந்தை வைரமுத்துவை போல் இல்லை என்று கேட்டாலும் கேட்பார்கள் அந்த அளவிற்கு தமிழ் கலாச்சாரம் உள்ளது என்று பதிலளித்திருந்தார்.