குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா! இதுல கூட தனித்துவம் தெரியனுமா?
நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுக்கு 6 மாதங்கள் கடந்தும் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா விக்னேஷ்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் படத்தின் போது காதலித்த நிலையில், இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரம்மாண்டமான ஏற்பாடுடன் திருமணம் செய்து கொண்டனர்.
நயனின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த பிரபலங்களும் வந்து கலந்து கொண்டனர். திருமணமான 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்கி தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் ஆகி விட்ட தகவல் அறிந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண காணொளியினை வெளியிட மறுப்பதாக கூறுகின்றனர்.
குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜோடி
வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்த இந்த தம்பதிகள் தற்போது, குழந்தைகளின் முழு பெயரையும் வெளியிட்டுள்ளது.
உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என குழந்தைகளின் பெயர்களுக்கு கடைசியில் முதலில் நயன்தாராவின் N வருவது போலவும் கடைசியில் விக்னேஷ் சிவனின் சிவன் வருவது போலவும் பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளுடன் கடற்கரை ஓரத்தில் எழில்கொஞ்சும் இயற்கை அழகுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில் நயன்தாரா தனது மகன்களை மடியில் வைத்திருக்கும்படியான புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. அதில் குழந்தைகளின் முகங்களும் தெரிந்துள்ளதால் ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
குழந்தைகளின் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர் ஒருவர், நீங்க தமிழ்நாட்டுல பிறந்தவர் தனா? நண்பரே.... நீங்க எது பண்ணாலும் அது ஒரு பிரச்சனை அதுல ஒரு யோசனை அதுல ஒரு கேள்விக்குறி எல்லாமே சிறப்பா செய்றீங்க நண்பரே..... எல்லா விஷயத்துலயும் தனித்துவமா தெரிய நும்னு முடிவு பண்ணிட்டீங்களா.... இத நான் சொல்லக்கூடாதது தான் இருந்தாலும் உங்களை டிவியில் எல்லாத்தையும் பாக்குற பிரபலமா இருக்கீங்க அதனால நான் சொல்றேன்... உங்க ரெண்டு பேரையும் புரிஞ்சக்கவே முடியல... என்று பதிவிட்டுள்ளார்.