நயனின் இரட்டைக் குழந்தைகள்! ஆக்ரோஷத்துடன் வனிதா போட்ட டுவிட் என்ன தெரியுமா?
லேடி சூப்பர்ஸ்டாருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது குறித்து பல சர்ச்சைகள் எழும் இந்த தருணத்தில் வனிதா விஜயக்குமாரின் இன்ஸ்டா பதிவு நயன் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
சர்ச்சை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் வாடகை தாயின் மூலம் இரட்டைக் குழந்தைகைளை பெற்றெடுத்துள்ளனர்.
இந்த தகவலை நேற்றைய தினம் விக்னேஷ்சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களது குழந்தைகளுக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் சிலர் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்கள்.
வனிதா விஜயகுமார்
இந்நிலையில் வனிதா விஜயகுமார் இவர்களது குழந்தைகள் குறித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததை தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்துவோர் குறித்தும் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் வனிதா, “அன்பான பெற்றோருக்குப் பிறந்த 2 அப்பாவி குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன? அவர்களுக்கு எல்லா குழந்தைகளும் பெறத் தகுதியான வாழ்க்கையை வழங்கவும் கொடுக்கவும் முடியும்.
ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுத்துவிடுபவர்களை தான் முதலில் சட்டப்படி தண்டிக்க வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும் என்று சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி குடுக்கறதும் ட்வீட் போடுறதும் வழமை. இவர்களை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்” என கூறியுள்ளார்.
இந்த பதிவு நயன்தாரா ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.