Buttermilk: பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மோர்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
வெயில் காலத்திற்கு ஏற்ற பானமாக இருக்கும் மோர் அதிகமாக குடித்தால் பக்க விளைவு ஏற்படுமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வெயில் காலத்தில் மோர்
கோடைகாலம் வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக பழங்கள், பானங்கள் இவற்றினை தான் நாம் பருகி வருகின்றோம்.
அதில் மோருக்கு தனி இடம் உண்டு. அளவுக்கு அதிகமான நன்மைகளைக் கொண்ட மோர், செரிமானத்திற்கு உதவுவதுடன், உடம்பிற்கு குளிர்ச்சியை தருகின்றது.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டவும் செய்கின்றது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவையும் குறைக்கின்றது.
இவ்வாறு பல சத்துக்களைக் கொண்ட மோரை அதிகமாக பருகினால் சில சிக்கல்கள் ஏற்படும். ஒரு கப் மோரில் அதாவது 245 மில்லி மோரில், கலோரிகள், புரதம், நார்ச்சத்து, கால்சியம், சோடியம், வைட்டமின் பி12 இவைகள் காணப்படுகின்றது.
மோர் குடித்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்
சளி காய்ச்சல், ஒவ்வாமை பிரச்சினை இருக்கும் போது மோரை இரவில் பருகக்கூடாது.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மோரில் இருக்கும் சோடியம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
வெண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. இதற்கு காரணம் வெண்ணெய்யில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால், தொண்டையில் தொற்று மற்றும் சளி பிரச்சினை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |