இஞ்சி, சுக்கு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? பயன்கள் என்னென்ன?
இஞ்சி மற்றும் சுக்கு இரண்டிற்கும் இருக்கும் வித்தியாசம் மற்றும் பயன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இஞ்சி மற்றும் சுக்கு
இஞ்சி காய்ந்தால் அதுவே சுக்கு என்று கூறப்படுகின்றது. ஆனால் இவை இரண்டிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றது.
சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கு சிறந்த மருந்தாக இஞ்சி மற்றும் சுக்கு இருக்கின்றது. இஞசியை சாறு வடிவிலும், சுக்கை பொடியாகவும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
இவை இரண்டிற்கும் இருக்கும் மருத்துவ குணங்கள் ஓரளவிற்கு ஒன்றாகவே இருக்கும் நிலையில், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பக்கவிளைவையும் ஏற்படுத்தும்.
ஆதலால் இவை இரண்டினையும் மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்தாது.
இஞ்சியின் பயன்கள்
சமையலில் சுவையூட்ட பயன்படுத்தப்படும் இஞ்சி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.
வலி நிவாரணியாக பயன்படும் இவற்றினை உடம்பு வலி உள்ளவர்கள் கஷாயமாக வைத்து குடித்தால் விரைவில் பிரச்சினை தீரும். வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகின்றது.
காய்ச்சல் தருணங்களிலும் இஞ்சியை கஷாயமாக வைத்து குடித்தால் காய்ச்சல் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.
ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றது.
சுக்கின் பயன்கள்
சுக்கு சுவாச பிரச்சினைக்கு சிறந்தது மட்டுமின்றி வாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகின்றது.
இஞ்சியைப் போன்று சுக்கும் சமையலுக்கு சுவையூட்ட பயன்படுத்தப்படுகின்றது.
இருமல், சளியால் அவஸ்தைபடுபவர்கள் சுக்கை பொடியாக சிறிது எடுத்துக் கொண்டு சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். காய்ச்சலை குறைப்பதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுகின்றது.
பசியைத் தூண்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |