கடுகு சட்னி எப்படி செய்யலாம்? வெறும் 5 நிமிடம் போதுமாம்
இட்லி, தோசைக்கு ஏற்ப சுவையான கடுகு சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி, தோசை இவற்றிற்கு விதவிதமான சட்னி செய்து சாப்பிடும் நாம் சுவையான மற்றும் ஆரோக்கியமான கடுகு சட்னி செய்து அசத்தலாம்.
கடுகு துவையலுடன் சிறிது நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடுகு- 5 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 5 ஸ்பூன்
தக்காளி-2
காய்ந்தமிளகாய்-4
பூண்டு- 6 பல்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் அகலமான கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதனுள் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்க்க வேண்டும்.
கடுகு சற்று வெடித்தவுடன் அதனுடன் பூண்டு, வரமிளகாய், தக்காளி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களையும், அதனுடன் கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கடுகின் கசப்பு தெரிவதாக நீங்கள் உணர்ந்தால் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு தாளிப்பு சேர்த்து பரிமாறினால் சுவையான கடுகு சட்னி தயார்.
குறிப்பு: கடுகை வறுக்கும் போது கவனம் தேவை. கடுகு கருகி விட்டால் சட்னியின் சுவை மாறிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |