CWC இருந்து ஷிவாங்கி விலகல்?
கோமாளியாக இருந்து குக்காக வலம் வந்து கொண்டிருக்கும் சிவாங்கி தற்போது குக் வித் கோமாளியிலிருந்து இடைவிலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.
இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக்குரலால் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஷோவில் கோமாளியாக அறிமுகமாகி தற்போது குக்காக சீசன் 4 வை சிறப்பித்து வருகிறார். சிவாங்கியை பொருத்தமட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது.
சிவாங்கி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, “டான்” திரைப்படத்திலும் கதாநாயகிக்கு நண்பியாக நடித்திருப்பார்.
சிவாங்கியின் இந்த முடிவிற்கு காரணம்
இந்த நிலையில் குக் வித் கோமாளியிலிருந்து இடைவிலக போவதாக சிவாங்கி அவர்கள் ஒரு தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிவாங்கி குக்கானதும், இவர் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் அதற்கெல்லாம் ஒரு பதிலும் சொல்லாத சிவாங்கி தற்போது புகைப்படத்துடன் அதிர்ச்சியான போஸ்ட்டை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த போஸ்ட்டை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்ததுடன், ஏன் நீங்க போறீங்க? உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் இது தொடர்பில் எந்தவிதமான அப்டேட்டையும் அவர் தரவில்லை. மேலதிக தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கவும்.