இன்னும் 6 நாளில் திருமணம்...! இன்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் எங்கேயும் எப்போதும் பட நடிகர்!
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சர்வானந்த் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் சர்வானந்த்
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும், ஜே.கே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
இந்த இரு திரைப்படங்களிலேயே இவர் பல ரசிகர்கள் கூடி விட்டார்கள். இவர் முதன் முதலில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் தான் அறிமுகமானார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், நடிகர் சர்வானந்திற்கு ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விபத்து
இந்நிலையில், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் சந்திப்பில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்த நடிகர் சர்வானந்திற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
இவருக்கு எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மேல் மோதாமல் செல்வதற்காக முயன்ற போதே அவரின் கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. இதனால் அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த விபத்தில் அவருக்கு சிறு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து குறித்து குடும்பத்தினரும், பொலிஸாரும் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.