விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்: தங்கை வெளியிட்ட உருக்கமான பதிவு
பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் மூர்த்தி ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையே உள்ள பாசப் போராட்டத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் நான்காவது தம்பியான கண்ணன் திடீரென வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வந்ததால், குடும்பத்தில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆம் குறித்த சீரியலில் கண்ணனான நடிக்கும் சரவண விக்ரமிற்கு திருமண காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கண்ணன் வாகனம் ஓட்டும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அவருக்கு காயம் ஏற்பட்டது என்று ஆனால் வலியை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது காயத்தினைக் குறித்தும் படக்குழுவினரிடம் கூறாமல் சிறப்பாக நடித்துள்ளார்.
ஒரு தங்கையாக உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது... தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளியுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.