விரைவில் நடிகர் ஜெய்க்கு திருமணம்! பெண் இவர் இல்லையாம்? பார்ட்டியுடன் கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவில் சுப்பரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜெய்.
பல படங்களில் நடித்த இவர், எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த காலகட்டத்தில் இருந்தே அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.
அதன்பின்னர், டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன் மீது காதல் வயப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக ரகசிய குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் சமீப காலமாக உலா வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இதற்கு வாணி போஜன் மறைமுகமாக ஒரு ட்வீட் போட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், 38 வயது ஆகும் நடிகர் ஜெய்க்கு திருமண ஏற்பாட்டை நடத்தி வருகிறார்களாம்.
அவரின் பெரியப்பாவான இசையமைப்பாளர் தேவா தான் தற்போது திருமண ஏற்பாடுகளை முன் நின்று கவனித்து வருகிறாராம்.
அடுத்தடுத்து ஜெய் பற்றி வெளிவந்த செய்திகள் தான் இந்த அவசர திருமண ஏற்பாட்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் ஜெய்யும் தற்போது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.
இதனால், அவருடைய வீட்டில் திருமண கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டிருக்கிறது.
விரைவில் திருமணம் நடக்க இருக்கும் ஜெய் இந்த விஷயத்தை தன் சென்னை 28 நண்பர்களுக்கு தெரிவித்து பார்ட்டியும் கொண்டாடி இருக்கிறார்.