பிரபல நடிகையின் மகன் திடீர் உயிரிழப்பு... தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்! கதறும் நடிகை
பிரபல நடிகையான கவிதாவின் மகன் கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். இவரது கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற தகவல் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தினால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரையுலகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதுமட்டுமின்றி கவிதாவின் கணவர் தசரதராஜ் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் மகனை பறிகொடுத்த சோகத்தில் இருக்கும் நடிகை கவிதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மற்றும் சின்ன திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்
நடிகை கவிதா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு, பாண்டவர் பூமி, அவள் வருவாளா, ரட்சகன், ராசி, மேட்டுக்குடி உள்பட பல திரைப்படங்களிலும் கங்கா, நந்தினி உள்பட ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.