கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கும் சனியோகம்: பண மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்!
பொதுவாகவே சனி என்றால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி என எமக்கு கஷ்டத்தை கொடுப்பவர் என்று தான் பயந்திருக்கிறோம்.
ஆனால் சனிபகவான் நமக்கு நன்மைகளையும் கொடுப்பார். அதற்கு ஏற்ற யோகம் தான் இந்த ஷஷ மஹாபுருஷ யோகம்.
சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைவதால் இந்த ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு ராஜயோகமாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்த ஷஷ மஹாபுருஷ யோகம் 5 ராசிக்காரர்களுக்கு பல ராஜயோகத்தைக் கொடுக்ககூடியதாக உள்ளது. அந்த ராசிக்காரர்களான,
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த ஷஷ மஹாபுருஷ யோகத்தால் பல சிறப்பான பலன்களை பெறுவார்கள். இந்த யோகத்தாலும் சனியின் அருளாலும் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழவுள்ளது. இத்தனை காலம் இருந்து வந்த பிரச்சினைகளை நிரந்தரமாக விடுபடுவீர்கள். திடீர் பணவரவு உண்டாகும். உடல் நலத்திலும் குறை இல்லாமல் இருக்கும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தில் இவர்களின் வாழ்க்கை பல சாதகமான பலன்களையும் மாற்றங்ளையும் கொடுக்கும். உங்கள் செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாக பங்கு பற்றுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி மரியாதை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் புனித தலங்களுக்கு புனித யாத்திரையை மேற்கொள்ளுவார்கள். தொழிலில் பதவி உயர்வும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் உருவாகும். திருமண தடைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்மராசிக்காரர்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மாணவர்களும் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். இந்த ஷஷ மஹாபுருஷ யோகம் தொழிலும் தொழில் புரியும் இடத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். இந்த யோகத்தால் வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்
துலாராசியினர் இந்த யோகத்தின் பலனாக தொழில் துறையில் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் உள்ளவர்கள் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். பொருளாதராத்திலும் பல நன்மைகள் உங்களுக்கு வந்து சேறும். மாணவர்களுக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பெரும் ராஜயோகமாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது சாதகமான பலன்களைக் கொடுக்கிறது. உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். பொருளாதாரம் மேம்பட்டு இருக்கும். வாழக்கையும் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். உங்களில் உழைப்பால் நீங்கள் எடுக்கும் துறையிலும் தொழிலிலும் முன்னேற்றமடைவீர்கள். பதவி உயர்வும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்.