நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம்
இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய அம்மா- அப்பாவின் திருமண நாளை கோயிலில் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பயணித்து கொண்டிருப்பவர் தான் இயக்குநர் செல்வராகவன்.
இவர் மக்களால் அதிகமாக வரவேற்கப்பட்ட “ஆயிரத்தில் ஒருவன்” மற்றும் “புதுப்பேட்டை” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து “நானே வருவேன்” என்ற படத்தில் நடிகர் தனுஷை வைத்து மாஸ் காட்டியுள்ளார்.
சினிமா படம் இயக்கம் ஒரு பக்கம் இருக்கையில் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை வைத்திருக்கிறார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புகைப்படங்கள்
இந்நிலையில் சமீபக்காலங்களாக தன்னுடைய மனைவியை பிரிந்திருக்கிறார் என்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதற்கு செல்வராகவனும் குடும்பம் தொடர்பான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இன்றைய தினம் அவரின் அம்மா - அப்பா கஸ்தூரி- ராஜாவின் திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
சுவாமியை தரிசிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ நீண்ட நாட்களின் பின்னர் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.