வாழ்க்கை ரொம்ப அடிபட்டவர் போல் பேசுகிறாரே! என்ன நடந்திருக்கும்?
ரசிகர்களுக்கு அவ்வப்போது செல்வராகவன், தத்துவங்களை அள்ளி வீசியப்படி பிரபல்யமடைந்து வருகிறார்.
அடுத்து திரைக்கு வரும் திரைப்படங்கள்
செல்வராகவன் ஒரு பிரபல்யமான இயக்குநராக பிரபலமடைந்து வருகிறார். இவர் சமிபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “நானே வருவேன்” என்ற திரைப்படத்தை இயக்குயுள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக “ஆயிரத்தில் ஒருவன் 2 ” என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும், இவர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியையும் குழந்தையும் பிரிந்து வருவதுப்போல் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் குறித்து ஓபனாக கூறாமல் இயக்குநர், மறைமுகமாக தத்துவங்கள் மூலம் கூறியிருந்தார்.
தத்துவங்கள் கூறி வரும் இயக்குநர்
கடந்த 14-ஆம் திகதி, “காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் கரை சேர்ந்து விட்டோம் என அர்த்தம். இறைவன் அருள்... ஐயோ ஏதாவது தவறாக போய் விடுமோ என கலங்கத் தேவையில்லை” என பதிவிட்டிருந்தார்.
காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் கரை சேர்ந்து விட்டோம் என அர்த்தம். இறைவன் அருள்.
— selvaraghavan (@selvaraghavan) January 14, 2023
ஐயோ ஏதாவது தவறாக போய் விடுமோ என கலங்கத் தேவையில்லை.
இதனையடுத்து, “கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை” எனவும் பதிவிட்டுள்ளார்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை. !
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2023
இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் “ வாழ்க்கை ரொம்ப அடிப்பட்டவர் போல் பேசுகிறாரே” எனவும் இவரின் கருத்தில் ஏதோ உள்குத்து இருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.